கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து  5 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பழனி பிரிவு அருகே நெகிழிப் பொருட்கள் மற்றும் இ பாஸ் சோதனையால் 3 கிலோமீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது.  எனவே நெகிழிப் பொருட்கள் மற்றும் இ பாஸ் சோதனையை மலை அடிவார பகுதிகள் அல்லது சாலைகள் அகலமான பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து சோதனை செய்ய வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Night
Day