நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகளால் நாடுகாணி சோதனை சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து நாடுகாணி சோதனை சாவடியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேரம்பாடி, தாளூர் போன்ற சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Night
Day