ஸ்ரீரங்கம் ஏகாதசி பகல்பத்து 8ம் நாள் விழா - ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்த நம்பெருமாள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து நிகழ்ச்சியின் 8 ஆம் நாள் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதையடுதது 20 ஆம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. பகல்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று காலை நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டையுடன், மாந்துளிர் நிற பட்டாடை அணிந்து காசுமாலை, முத்துமாலை, சிகப்புக்கல் ஆபரணங்கள் சூடி தங்க பல்லக்கில் உள்பிரகாரங்களில் வலம் வந்து அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தி பரவசத்தில் ரெங்கா.... ரெங்கா... என கோஷம் எழுப்பி மனமுருக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல்பத்து வைபவத்தின் 10ம் நாள் உற்சவத்தில் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார். 

Night
Day