குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி - மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் மாதம் ஜனவரி 26ம் தேதி நாட்டின் 77வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பல்வேறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார உறுதிகள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. இதில் பசுமை மின் சக்தி எனும் தலைப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 2024ல் குடைஓலை முறை குறித்து அலங்கார ஊர்தி குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றது. ஆனால் கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2026 இல் நடைபெற உள்ள 77வது குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அலங்கார உறுதி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Night
Day