வட மாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : அமைச்சு பணியாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராயபேட்டையில் சாலையில் நடந்துசென்ற வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த அமைச்சு பணியாளரை போலீசார் கைது செய்தனர். 

ராயப்பேட்டையை சேர்ந்த வடமாநில இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு தனியாக சென்றுள்ளார். அப்பெண்ணை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அப்பெண் கூச்சலிட்டதால் அருகில் இருந்த நபர்கள் அந்த இளைஞரை தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த இளைஞரிடம் ராயபேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர், தேனாம்பேட்டையை சேர்ந்த பாலமுருகன் என்பதும், அமைச்சு பணியாளராக பணியாற்றுவதும் தெரிய வந்தது. இதன்பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.

Night
Day