இந்தியாவில் மருந்துகள் விலை குறைந்தது - மோடி பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வன்முறை நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடிக்கு குழந்தைகள், பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாநில வளர்ச்சிக்காக 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்லும் நாட்டினார்.

குக்கி மற்றும் மெய்தி இன மக்களின் 2 ஆண்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் சுரசந்த்ப்பூர் மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடிங்கிலும் தேசிய கொடி காண்பித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுரசந்த்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பூங்கொத்து மற்றும் போட்டோ ஃபிரேம் வழங்கி சிறுவர், சிறுமிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து, சிறுமிகள் பாடிய பாடலை மனமுருகி கேட்டு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, பெண்களுடன் அமர்ந்து உரையாற்றினார்.

சூரசந்த்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். இதில், மணிப்பூர் மாநிலத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும், 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால் மற்றும் சொத்து மேலாண்மை திட்டங்களும் அமைக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலம் தைரியம் மற்றும் துணிச்சலின் பூமி எனவும், கனமழையையும் பொருட்படுத்தாமல் பொதுக்கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார். மணிப்பூரின் பெயரில் உள்ள மணி தான் எதிர்காலத்தில் முழு வடகிழக்குப் பகுதியையும் பிரகாசிக்கச் செய்யப் போவதாக கூறிய பிரதமர் மோடி, இந்திய அரசு மணிப்பூரை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சித்து வருகிறது என்றார். மணிப்பூரில் சாலை, ரயில்வேக்கான பட்ஜெட்டை அதிகரிக்க உள்ளதாகவும், இம்பால் ரயில் நெட்வொர்க்கை தேசிய ரயில் நெட்வெர்க் உடன் இணைக்க 22 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளதாகவும் கூறினார்.


Night
Day