கடன் பெற்றோர் முறையாக தவணை செலுத்துவதில்லை - காவல்நிலையத்தில் நிதி நிறுவனங்கள் உரிமையாளர்கள் மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நிதி நிறுவனங்கள் நடத்தும் உரிமையாளர்கள் ஒன்றுகூடி காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தனியார் நிறுவனத்தில் இரு சக்கர வாகனத்திற்கு கடன் பெற்றோர் முறையாக தவணை செலுத்திவதில்லை என தெரிவித்தனர். மேலும், கடன் பெற்று வாங்கிய வாகனத்தை எந்த ஆவணங்கள் இன்றி வேறு ஒருவருக்கு அடமானம் வைத்து விடுதாகவும் வேதனை தெரிவித்தனர். சம்பந்தப்பட்டவர்களிடம் தவணை தொகை குறித்து கேட்கும் போது தற்கொலை செய்து கொள்வதாக போன்ற பல்வேறு மிரட்டல்களை விடுப்பதாகவும் நிதி நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர். எனவே மறு அடமான முறையில் வாகனத்தை அடமானம் வைக்ககூடாது மற்றும் இருசக்கர வாகனத்திற்கு பெற்ற கடனை முறையாக செலுத்த வேண்டும் என்றும் சட்டவிரோதமாக ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி நிதி நிறுவனங்கள் நடத்தும் உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். 

Night
Day