ரூ.2,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்... கடத்தல் மன்னனான திமுக புள்ளி தலைமறைவு...

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருளை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், தமிழகத்தை சேர்ந்த மூவரை கைது செய்துள்ளனர்... தேங்காய் பொடியுடன் சேர்ந்து போதைப்பொருளை வெளிநாட்டுக்கு கடத்தி வந்த திமுக புள்ளியான தமிழ் திரைப்பட தயாரிப்பாளரின் வில்லங்க முகம் பற்றி விளக்குகிறது செய்தி தொகுப்பு...

டெல்லியில் போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையில் அம்மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்...

கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், சுமார் ஆயிரத்து 700 கிலோ மெப்பட்ரோன் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து உணவு பொருளுடன் சேர்த்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக அந்நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்...

அதே சமயம் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு கடத்தப்படும் போதைப்பொருள் டெல்லியில் இருந்து நகர்வதாக ரகசிய தகவல் கொடுத்தனர்...

இதையடுத்து உஷாரான டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி காவல்துறை பசாய் தாராப்பூர் என்ற பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் அதிரடியாக உள்ளே புகுந்தனர்...

அங்கு ஏற்றுமதிக்கு தயாராக இருந்த தேங்காய் பவுடரை பரிசோதித்த அதிகாரிகள் அதனுடன் இருந்த 50 கிலோ ஸ்யூடோஃபெட்ரின் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்...

அத்துடன் கடத்தலில் தொடர்புடைய மூவரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்த போது அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது அம்பலம் ஆனது...

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது... கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியில் மையமாக கொண்டு வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி வந்ததும், மூன்று ஆண்டுகளில் மட்டும் 3 ஆயிரத்து 500 கிலோ ஸ்யூடோஃபெட்ரின் போதை பொருளை கடத்தியதும் தெரிய வந்தது...

கைப்பற்றப்பட்ட ஸ்யூடோஃபெட்ரின் போதைப்பொருளின் மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் என்ற பகீர் தகவலும் அம்பலம் ஆனது...

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நடிகை கயல் ஆனந்தி நடித்து வரும் மங்கை திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான் இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவன் என்பதும் தெரியவந்தது... கடத்தல் கும்பல் தலைவனான ஜாபர் சாதிக் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது...

தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ள நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்...

இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தில் மைதீன் நடித்து வருவதாகவும், சலீம் அரசியல் பிரமுகராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது...

இந்த மூன்று பேரும் சேர்ந்து சர்வதேச கடத்தல் கும்பலாக வலம் வந்த நிலையில், மூவரும் சினிமாவில் முதலீடு செய்து உள்ளார்களா?... என்னென்ன படத்திற்கு பைனான்ஸ் செய்து உள்ளார்கள்?.,,, எங்கெங்கு சொத்துகள் வாங்கியுள்ளனர் என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்குடன் சினிமா உலகை சேர்ந்த யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வரும், அடுத்தடுத்து பல திமிங்கலங்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

இதில் ஹவாலா மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றமும் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத்துறையினரும் ஆட்டத்தை துவக்கி உள்ளதாகவும் தெரிகிறது...

Night
Day