ராமநாதபுரம்: காவலரிடம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டு மின் இணைப்பிற்கு காவலரிடம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். காவாகுளம் கிராமத்தை சேர்ந்த அம்மாசி, லஞ்ச ஒழிப்பு துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி பெயரில் மின் இணைப்பு வேண்டி சிக்கல் மின் வாரிய உதவி மின் பொறியாளர் மலைச்சாமியை தொடர்பு கொண்டார். அதற்கு 12 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும் என்றும், அதில் ஆன்லைனில் பதிவு செய்த தொகை 5 ஆயிரத்து 192 ரூபாய் போக மீதம் உள்ள பணம் தனக்கு லஞ்சமாக வேண்டும் என மலைச்சாமி கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாயை வாங்கிய மலைச்சாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

Night
Day