ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை - காவலர் பணியிடை நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சேக் முகமது என்பவர், கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து கோவைக்கு இன்டர்சிட்டி ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அருகே அமர்ந்திருந்த சட்டக்கல்லூரி மாணவியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, காவலரின் அத்துமீறலை தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், விசாரணை நடத்தி வந்த நிலையில், காவலர் சேக் முகமதுவை சஸ்பெண்ட் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Night
Day