கிறிஸ்துமஸ் திருநாள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

கருணையின் வடிவமாய் விளங்கிய, இயேசுபிரான் அவதரித்த திருநாளான, கிறிஸ்துமஸ் திருநாளில் அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தியில், கருணையே வடிவான, கர்த்தராகிய இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

உன் மீது நீ அன்பு செலுத்துவது போல அடுத்தவர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்று எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த தினத்தை, கிறிஸ்தவப் பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி, வீட்டினை அழகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டு, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
  
"கருணையோடு இருப்பவர்களுக்கு கருணை கிடைக்கும்; தூய இதயத்தோடு இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்; அமைதியை உருவாக்குகிறவர்கள் ஆண்டவனின் புதல்வர்கள் என அழைக்கப்படுகிறார்கள்" என்ற இயேசுபிரான் அவர்களின் போதனைக்கு ஏற்ப, நாம் ஒவ்வொருவரும் செயல்பட்டால் நம் வாழ்வில் வெற்றி நிச்சயம் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்பதை இந்நன்னாளில் எண்ணி பெருமிதம் அடைவதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.

அனைவரிடத்தும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டும் எனக் கூறி கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day