கோவை: துணை மின் நிலைய மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் அன்னூர் அருகே துணை மின்நிலைய மின்மாற்றியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அன்னூரை அடுத்த கரியாம்பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது. இங்குள்ள மின்மாற்றி ஒன்றில் திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால், மின்மாற்றி வெடித்துச் சிதறி தீ கொளுந்துவிட்டு எரிந்தது. மின் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்‍குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அன்னூர் நகரம், கரியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

Night
Day