போலீஸ் வாகனத்தில் சிறுவனை கடத்திய வழக்கு - ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிறுவன் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறை ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமி என்பவரின் மூத்த மகன் தனுஷும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்ம வனராஜா என்பவரின் மகள் விஜயஸ்ரீயும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதை விரும்பாத வனராஜா, தனது மகளை மீட்க காவல் உதவி ஆய்வாளராக இருந்த மகேஸ்வரி மூலமாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தியின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. 

இதை தொடர்ந்து, கடந்த ஜூன் 6-ம் தேதி வனராஜா மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் தனுஷ் வீட்டுக்கு சென்று அவரது தாயை மிரட்டிவிட்டு, அங்கிருந்த அவரது 17 வயது இளைய மகனை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. சிறுவன் கடத்தலுக்கு ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமின் காவல் வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் பதறிப்போன தாய், போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் அந்த சிறுவன் சென்னை மீனம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

Night
Day