ED ரெய்டு - ரூ.18.10 கோடி சொத்துக்கள் முடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 18 கோடியே 10 லட்ச ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் செயல்பாடுகளில் போலி ஆவணங்கள் மூலம் செய்யப்பட்ட பெரிய அளவிலான மோசடி தொடர்பாக கடந்த 2 தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 15 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ஒரு கோடியே 56 லட்ச ரூபாய் , 74 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வங்கி கணக்குகளில் உள்ள 8 கோடியே 40 லட்ச ரூபாய் பங்குகள் என சுமார் 7 கோடி ரூபாய் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day