புதுச்சேரி: மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் போலீசில் சரண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு கணவர், காவல் நிலையத்தில் சரணடைந்தார். வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த விக்னேஸ்வரன், மனைவி இந்துமதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் விக்னேஷ்வரனை அவரது உறவினர்கள் மனநலமருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் தம்பதி இடையே பிரச்சனை எழுந்த நிலையில், இந்துமதியை காய்கறி நறுக்கும் கத்தியால் அறுத்து கொன்றுவிட்டு விக்னேஸ்வரன் தன்வந்திரி போலீசில் சரணடைந்தார்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day