லால் சலாம் திரைப்படம் உலக அளவில் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லால் சலாம் திரைப்படம் உலக அளவில் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி 9-ஆம்  தேதி வெளியானது.  லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோரும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் லால் சலாம் படம் வெளிவந்து 3 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Night
Day