எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாஜக முன்னாள் பெண் பிரமுகர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் சரணடைந்துள்ளனர்.
மதுரை மத்திய தொகுதி பாஜக முன்னாள் பிரமுகர் சரண்யாவுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமான நிலையில் முதல் கணவர் உயிரிழந்தநிலையில், இரண்டாவது கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகபுலிகாடு கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்பவரை 3வது திருமணம் செய்த சரண்யா, தனது இரு மகன்கள் மற்றும் கணவருடன் உதயசூரியபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
தம்பதி இருவரும் உதயசூரியபுரம் கடைத் தெருவில் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்றிரவு கணவரும், மகன்களும் பைக்கில் வீட்டிற்கு சென்ற நிலையில், சரண்யா நடந்து சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் சரண்யாவின் கழுத்து மற்றும் தலையில் வெட்டி படுகொலை செய்தனர். தகவலறிந்து சென்ற வாட்டாத்திகோட்டை போலீசார் சரண்யாவின் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், பாஜக நிர்வாகி சரண்யாவின் 2வது கணவர் பாலனின் முதல் மனைவியின் மகன் கபிலன் மற்றும் அவரின் நண்பன் குகன் ஆகிய 3 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பாலனின் சொத்துக்களை அவரது மகன் கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை செய்த விசாரணையில் தெரியவந்துள்ளது.