பட்டாக்கத்திகளுடன் இளைஞர்கள் அட்டகாசம் - நடவடிக்கை எடுக்க கோரி காவல் உதவி ஆணையர் அலுவலகம் முற்றுகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடுத்த புழலில் கஞ்சா போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். 

புழல் திருவள்ளுவர் தெருவில் கஞ்சா போதையில் பட்டாக்கத்திகளுடன்  இளைஞர்கள் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்து  பொதுமக்களை அச்சுறுத்து வகையில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புழல் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தையும் காவல் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Night
Day