ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு அரிவாளால் வெட்டு : தப்பியோடிய கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அருகே, ரியல் எஸ்டேட் தொழில் உரிமையாளரை மர்மநபர்கள் வெட்டி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வள்ளலார் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்  ராஜசேகர். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி அருகில் உள்ள அயன் கடைக்கு சென்ற போது, அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜசேகரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், போலீசார் இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்

Night
Day