சென்னையில் பிரதான சாலைகளில் சூழ்ந்த மழை நீர் : அவதியடைந்து வரும் வாகன ஓட்டிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் ஜிஎஸ்டி சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பல்லாவரத்தில் இருந்து பம்மல் செல்லும் பிரதான சாலையில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் பழுதாகி சாலைகளில் நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பெரம்பூர் செங்கை சிவம் பாலம் கீழ்பகுதியில் உள்ள சுரங்க பாதையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. மேலும், அங்கு செயல்படாத ராட்சத மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டு நிலையில், தண்ணீர் வெளியேற்றுவதற்கு போதிய மாநகராட்சி பணியாளர்கள் இல்லாததால் மாற்றுவழியில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சென்னையில் பெய்து தொடர் மழை காரணமாக அம்பத்தூரில் இருந்து ஆவடி செல்லக்கூடிய திருமுல்லைவாயில் பிரதான சாலை முழுவதுமாக மழை நீர் சூழ்ந்தது. இதனால், அவ்வழியை கடந்த செல்ல முடியாமால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Night
Day