எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தொழிலதிபரை கட்டிப்போட்டு நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் அவரிடம் பணிபுரியும் காவலாளிக்கு தொடர்பு இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீலிகொல்லை பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை அதிபர் வீட்டில் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், தொழிலதிபர் இம்தியாஸ் மற்றும் அவருடைய மனைவி, வீட்டின் பணியாளர் சக்திவேல் ஆகியோரை கட்டி போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இம்தியாஸ் மனைவி சபீதாவை அழைத்துக்கொண்டு பீரோவை திறக்கும்போது, அவர் கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது, அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிச்சென்ற நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் வீட்டில் வேலை செய்யும் சக்திவேலிடம் நடத்திய விசாரணையில், அகரம் பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவருடன் சேர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.