எழுத்தின் அளவு: அ+ அ- அ
கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது பிரான்ஸ், தென் கொரியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா, ஆஸ்திரேலியா பிரதமர் அல்பானீஸ், தென்கொரிய குடியரசு தலைவர் லீ -ஜேமியுங், கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ், பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
உலக தலைவர்களுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுதல், கலாச்சாரம் போன்ற துறைகளில் சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றி ஆலோசித்தார். அதுமட்டுமின்றி உலகளாவிய பிரச்னைகளையும் குறித்தும் கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து, இறுதியில் உலக தலைவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.