இந்தியா, கனடா இடையே மீண்டும் தூதரக உறவுகள் - இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பில் ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனட பிரதமர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் தூதரக உறவுகளை மேம்படுத்துவது, இரு நாடுகளிடையே தூதர்களை நியமிப்பது ஆகியவை ஒப்புக்‍கொள்ளப்பட்டுள்ளது.

கனடாவில் கடந்த 2023ல் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிறகு இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது பிரதமர் கார்னி தலைமையில் அமைந்துள்ள புதிய கனடிய அரசு இந்தியாவுடன் மீண்டும் உறவை புதுப்பிக்க விரும்பியது.  இதனால் பிரதமர் மோடியின் இந்த கனடா பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. 10 ஆண்டுகளுக்‍கு பிறகு மீண்டும் கனடா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கார்னியும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். 

இ​தில் இரு நாடுகளிடையிலான இரு தரப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஒப்புக்‍கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் இருதலைவர்களும் பேசினர். அப்போது பேசிய பிரதமர் மோடி ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மனித குலத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்‍கொண்டார். 

வரும் காலத்தில், இந்தியாவும், கனடாவும் பல துறைகளில் இணைந்து பணியாற்றி முன்னேற்றம் அடையும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்‍கை தெரிவித்தார். மீண்டும் இரு நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் பல்வேறு பணிகளுக்‍கான விசாக்‍களை வழங்கவும் ஒப்புக்‍கொள்ளப்பட்டது. இந்தியா மற்றும் கனடா உறவுகள் பல வழிகளில் மிகவும் முக்கியமானவை என்றும், கனடாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல், இந்திய மக்களும் கனடா மண்ணில் மிகப்பெரிய முதலீட்டை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்‍கது.

Night
Day