திருச்சி: ஐடி ஊழியரிடம் ரூ.18 லட்சம் பண மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி அருகே பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்டி தருவதாக கூறி ஐடி ஊழியரிடம் பண மோடி செய்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த நாகேந்திர பிராத் என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற லிங்க் ஒன்றை டவுன்லோடு செய்துள்ளார். அப்போது, அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை, நம்பிய நாகேந்திர பிராத், மோசடியாளர்கள் கூறிய 8 வங்கி கணக்குகளுக்கு கடந்த 3 மாதங்களில் 18 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். பின்னர், அவர்களிடமிருந்து எவ்வித தகவலும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நாகேந்திர பிராத் திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகிறனர்.

varient
Night
Day