இந்தியா
'இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது' - சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பேச்சு...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
மேற்கத்திய நாடுகளை உங்கள் வேலையை பாருங்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கண்டித்ததை ரஷ்யா பாராட்டியுள்ளது. ஐ.நா. மன்றத்தில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்பான விவாதத்தின் போது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது பற்றி மேற்கத்திய நாடுகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், உங்கள் வேலையை பாருங்கள் என காட்டமாக பதிலளித்ததுடன், ரஷ்யாவிடம் இருந்து மேற்கத்திய நாடுகள் வாங்கிய கச்சா எண்ணெய் பட்டியலை சுட்டிக்காட்டி இருந்தார். அவரது இந்த பேச்சை பாராட்டிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மற்றவர்களுக்கு உபதேசம் செய்தால், மேற்கத்திய நாடுகள் இப்படித்தான் மூக்குடைபட நேரிடும் என கிண்டல் அடித்தார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரின் கருத்தை பாராட்டுவதாகவும் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...