திருவாரூரில் தாளடி இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூரில் தொடர் மழை காரணமாக வலங்கைமான் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட 20 நாட்கள் ஆன தாளடி  இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.
 
மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் வேர்கள் முழுவதும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். எனவே அரசு பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும்,   இந்த ஆண்டு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுக்கோள்  விடுத்துள்ளனர்.

Night
Day