இந்தியா
'இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது' - சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பேச்சு...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் பல முறைகேடுகளில் சிக்கியவர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட்ட கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணங்களை பின்னர் தெரிவிப்பதாக அவர் கூறினார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், அரசியலில் சேர திட்டமிட்டுள்ளதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் தவிர பிற கட்சிகளுடன் சேர ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார். அண்மையில் மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி அளித்த பேட்டியில் மார்ச் 7ம் தேதி பெரிய மாற்றங்கள் நடைபெறவுள்ளதாக கூறியதற்கு, அது அபிஜித்தின் இணைப்பாக இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
கும்பகோணம் அருகே பாமக நிர்வாகி ம.கா.ஸ்டாலினை கொல்ல முயற்சித்த விவகாரம் - 6 ...