இந்தியா
மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு எதிராக தொடரப்பட்ட பண மோசடி வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஹவாலா பண பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக டி.கே. சிவகுமார் மீது வருமான வரித்துறை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. சிபிஐ தெரிவித்த புகாரை தொடர்ந்து டி.கே. சிவகுமாரை அமலாக்கத்துறை கைது செய்தது. பின்னர் ஜாமீனில் விடுதலையான அவர், தம்மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முறையிட்டார். ஆனால் அவரது மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திட்டமிடப்பட்ட குற்றம் இல்லை என்றால் இந்திய தண்டனை சட்டம் 120 பி.-யின் கீழ், அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர முடியாது எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...