திமுக பெண் நிர்வாகிக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலியல் தொந்தரவு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோட்டில் திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, திமுக பெண் நிர்வாகி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். கொடுமுடியைச் சேர்ந்த திமுக பெண்  நிர்வாகிக்கு, திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மலையம்பாளையம்  காவல்  ஆய்வாளரான திருஞானசம்பந்தத்திற்கும், பாலியல் ரீதியாக ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று  தற்போதைய திமுக ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் நிர்வாகி புகார் மனு அளித்துள்ளார். 

Night
Day