இரட்டை கொலை - குற்றவாளியை நெருங்க முடியாமல் திணறும் போலீசார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் விலாங்காட்டு வலசு இரட்டை கொலை சம்பவம் நடந்து 5 நாட்களாகியும் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 

விலாங்காட்டு வலசு அருகே கடந்த 1ஆம் தேதி முதிய தம்பதியினரை தாக்கி கொலை செய்து தங்க நகைகளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக 12 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்ய செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day