பஹல்காம் தாக்குதல் : பிரதமர் மோடியுடன், ரஷ்ய அதிபர் புதின் பேச்சு - ஆதரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர்,  தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ரஷ்யா தனது முழு ஆதரவை வழங்கும் என புதின் உறுதி அளித்ததாகவும்,  கூறியுள்ளார். அப்போது இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடும் ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்ததாகவும் ஜெய்ஸ்வால் பதிவிட்டுள்ளார். 

Night
Day