எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாகிஸ்தானுடனான பதற்றம் நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஸ் குமார் சிங் இன்று நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பஹல்காம் தாக்குதல் நடந்து 13 நாட்கள் ஆகியுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் பாகிஸ்தான் நாடுக்கான விசா சேவை ரத்து உள்ளிட்ட பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானும் பதில் மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தானை எதிர்கொள்வது தொடர்ரபாக, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளையும் சந்தித்து விட்ட நிலையில், பிரதமர் மோடி இன்று பாதுகாப்புத்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனிடையே, பாகிஸ்தான் மீது மக்கள் விரும்பும் நடவடிக்கையை மோடி அரசு நிச்சயம் எடுக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.