வக்ஃப் சட்டத்தை எதிர்த்த மனுக்கள் அடுத்த தலைமை நீதிபதி பிஆர்.கவாய் அமர்விற்கு மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வக்பு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் அனைத்தையும் அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள பி.ஆர் கவாய் அமர்வுக்கு மாற்றி தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அனைத்து தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்க வேண்டும் என்றும் அதற்கு கூடுதல் கால நேரம் தேவை என்பதால் விசாரணையை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வுக்கு மாற்ற விரும்புவதாகவும், மனுதாரர்கள் தரப்புக்கு சம்மதமா என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வினவினார். இதற்கு மனுதாரர் மற்றும் மத்திய அரசு தரப்பு ஒப்புக் கொள்ளவே நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வுக்கு மாற்றி விசாரணையை மே 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை இடைக்கால உத்தரவு தொடரும் என உத்தரவிட்டார். தற்போதைய தலைமை நீதிபதி வரும் 13-ம் தேதி பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day