நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று அழைக்க பெற்றவர் காமெடி நடிகர் கவுண்டமணி.

1980 காலகட்டத்தில் துவங்கி இன்று வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை நகைச்சுவை நாயகன் கவுண்டமணி பிடித்துள்ளார். அவர் கடந்த 1963-ம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி சென்னையில் இன்று காலை காலமானார். தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Night
Day