தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் மே 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைனில் தொடக்‍கம்: அண்ணா பல்கலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக பொறியியல் கல்லுரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள்  வரும் மே 7-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லுரிகளில் உள்ள ஒன்றரை லட்சத்துக்‍கும் மேற்பட்ட பி.இ மற்றும் பிடெக்‍ பொறியியல் படிப்புகளுக்‍கான இடங்கள் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கலந்தாய்விற்காக ஆன்லைன் விண்ணப்பம் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்‍கான தேர்வு முடிவுகள் வருகிற மே 9ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Night
Day