டிடிஎஃப் வாசன் வழக்கு - தமிழக காவல்துறைக்கு உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி டி.டி.எஃப் வாசன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மருத்துவ சிகிச்சை மற்றும் படப்பிடிப்புகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால், பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என டி.டி.எஃப் வாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், டி.டி.எஃப் வாசன் மீது அதிவேகமாக பைக் ஓட்டியது தொடர்பாக 4 வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டி.டி.எஃப் வாசன் மீது இதுவரை பதிவாகியுள்ள அனைத்து வழக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 2ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Night
Day