கிண்டி மருத்துவமனையில் செவிலியரை கத்தியால் தாக்க முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு மருத்துவமனையில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் செவிலியரை கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி நபர் ஒருவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணியில் இருந்த செவிலியரை அந்த ஊழியர் சிறிய கத்தியால் தாக்க முயன்றார். இதையடுத்து அங்கு இருந்த போலீசார், மதுபோதையில் தாக்க முயன்ற நபரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் என்பவர் தனது அறையில் இருந்த போது, விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு உயர் சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு அங்கு போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day