வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் காவல்துறையினர் அத்துமீறல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு பட்டாலியன் காவல்துறையினர் வணிக நோக்கத்தில் நடத்தி வந்த பரணி சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் கேண்டீனுக்கு சீல் வைக்கப்பட்டது. 

வருவாய் துறைக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 97 சென்ட் நிலத்தை காவல்துறையினர் வணிக நோக்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக  பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.  இந்த சைக்கிள் ஸ்டாண்டில் பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், காவல்துறையினர் ஆகியோர் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று வந்தனர். இதனால் காவல்துறையினருக்கு மாதம் 4 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைத்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து, நேரில் ஆய்வு செய்த வருவாய்த்துறையினர் இனி வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை என கூறி சீல்வைத்தனர். இதனால் காவல்துறையினருக்கும்  வருவாய்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Night
Day