"நாட்டை மன்னர் காலத்திற்கு திரும்ப அழைத்துச் செல்கிறார்கள்" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 பிரதமர் மற்றும் முதலமைச்சர்களை பதவி நீக்கும் மசோதா, நாட்டை மன்னர் காலத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் இருப்பதாக எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 


குடியரசு துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி, இந்தியா கூட்டணி எம்பிக்களுடன் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் கலந்துரையாடினார். அதில் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசின் மசோதா என்பது, மன்னர் யாரை வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யக் கூடிய இடைக்காலத்திற்கு திரும்பிச் செல்வது போல் இருப்பதாக கூறினார். இதன் மூலம் ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை கைது செய்ய அமலாக்கத் துறையைப் பயன்படுத்த முடியும் என்றும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை 30 நாட்களுக்குள் வெளியேற்றவும் முடியும் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கும், அதைப் பாதுகாப்பவர்களுக்கும் இடையே ஒரு போர் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Night
Day