எழுத்தின் அளவு: அ+ அ- அ
திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் ஜின்னா நகரில் வசித்து வரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொருளாளர் ஷேக் அப்துல்லா வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சோதனையின் போது ஷேக் அப்துல்லாவின் செல்போன், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர். இதேபோல் வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷேக் அப்ல்லா, ஆகஸ்ட் 25ஆம் தேதி சென்னை என்ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முகமது அலி என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முகமது அலி தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையல், அவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், முகமது அலி தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் இருந்தவர் என தெரிவந்துள்ளது.