மக்களவையில் ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குமுறை மசோதா தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்துதல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 21-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியது முதலே பீகார் மாநில வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தைக் கண்டித்தும் அது தொடர்பாக விவாதிக்கக் கோரியும் மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன. இந்நிலையில் இன்றும் காலை 11 மணிக்கு அவை கூடியது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை அறிவித்தார். அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தை எழுப்பிய எதிர்கட்சிகளின் எம்பிக்கள் பலகைகளைக் காண்பித்து அமளியில் ஈடுபட்டதால் 12 மணி வரை சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து 12 மணிக்கு அவை கூடியதும் எதிர்கட்சிகள் மீண்டும் கூச்சல் குழப்பத்தை விளைவித்தன. எனினும் கூச்சலுக்கு இடையே மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இணைய விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். 

எனினும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு போராட்டத்திற்கு இடையிலும் அரசு தனது பணிகளை தொடரும் என்று தெரிவித்தார். 

Night
Day