காவிரி கரையோர பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் குமாராபாளையம் பகுதியில் ஆற்றங்கரையோரம் உள்ள 25க்கும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், குமாரபாளையம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் குமாராபாளையம் - பவானியை இணைக்கும் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் 3 கிலோ மீட்டர் சுற்றி பவானி பகுதிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் ஆற்றுக்கு செல்வதை தடுக்கும் வகையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Night
Day