திருச்செந்தூரில் சிவாச்சார்யார்கள் - திரிசுதந்திரர்களிடையே மோதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழாவின் போது இருதரப்பு பூஜாரிகள் இடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.


அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கடந்த 14 ஆம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் திருவிழாவில் சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சார்யர்கள் - திரிசுந்தரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சுவாமி ஊர்வலம் சுமார் 2 மணி நேரம் தாமதமானதால், சுவாமி புறப்பாடை காண வந்த பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

Night
Day