எழுத்தின் அளவு: அ+ அ- அ
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், முதற்கட்ட குற்றப்பத்திரிகை அறிக்கையை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
நகை திருட்டு புகார் தொடர்பாக காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் கடும் கண்டனத்தை தொடர்ந்து இவ்வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது. முதற்கட்ட அறிக்கையை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் வழக்கின் சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட தனிப்படை காவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் முதல்கட்ட குற்றப்பத்திரிகை அறிக்கையை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.