எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை ஆதீனம் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருடைய கார் ஓட்டுநர் மீது கள்ளக்குறச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரையில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக மதுரை ஆதீனத்தின் வாகனம் சென்னைக்கு வந்தது. அப்போது வாகனம் உளுந்தூர்பேட்டை சர்வீஸ் சாலையில் வந்து ரவுண்டானா பகுதியில் திரும்பிய போது கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்குச் சென்ற கார் ஆதீனத்தின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. சென்னை எஸ்ஆர்,எம் கல்லூரியில் நடைபெற்ற சைவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் காரில் பயணம் செய்த மதுரை ஆதீனம் உட்பட யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்த மதுரை ஆதீனம் கூறியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில், மதுரை ஆதீனத்தின் கார் விபத்து குறித்த சிசிடிவி கட்சி தற்போது வெளியாகி உள்ளது. அதில் மதுரை ஆதீனத்தில் கார் வேகமாக சென்றது சிசிவிடி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் மதுரை ஆதீனம் தரப்பில் பொய்யான தகவலை பரப்புவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.