காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் வழக்கு : விளம்பர திமுக அரசின் நிர்வாகத் திறனை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ஓராண்டாகியும் இந்த வழக்கில் இதுவரை துப்புதுலங்காதது விளம்பர திமுக அரசின் நிர்வாகத் திறனை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரைச் சேர்ந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்,  கடந்த ஆண்டு மே 2ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். 4ம் தேதி ஜெயக்குமார் வீட்டிற்கு பிறகு உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கழுத்து, கைகள், கால்கள் மின்வயரால் கட்டப்பட்ட நிலையில் உடல் எரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் மேற்பார்வையில், டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 11 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

கொலை செய்யப்படுவதற்கு முன்பாக ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, நான்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் இடம் பெற்றிருந்த அனைவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதநிலையில், ஜெயக்குமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஓராண்டாகியும் சிபிசிஐடி விசாரணையிலும் துப்பு ஏதும் துலங்காத நிலையில், கிணற்றில் போட்ட கல்லாக வழக்கு விசாரணை நீடிப்பது காவல்துறை மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Night
Day