போலீசாரே ஆதாரங்களை அழிக்க முயற்சி - வழக்கறிஞர் ஹென்றி திபேன்

எழுத்தின் அளவு: அ+ அ-

விசாரணையின்போது அஜித்தின் கண்ணிலும், பிறப்புறுப்பிலும் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்யப்பட்டதாக வழக்கறிஞர் ஹென்றி திபென் தெரிவித்துள்ளார். போலீசார் தாக்கியதில் அஜித்தின் உடலில் 44 இடங்களில் காயம் இருந்தது மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஹென்றி திபென், கடந்த 27ம் தேதி காணாமல் போன நகைக்காக 28ம் தேதி காலை 10.30 மணிக்கு தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதற்கு முன்பாக மானாமதுரை டிஎஸ்பி தலைமையில், தலைமை காவலர் வழிநடத்துகின்ற ஒரு சிறப்பு குழுவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டதாக கூறிய அவர், அந்தக்குழு அஜித் உட்பட சிலரை கைது செய்து கடந்த 27 மற்றும் 28ம் தேதி முழுவதும் கொடூர தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மடப்புரம் கோவில் பின்புறத்திற்கு கூட்டிச்சென்று மறைத்து வைக்கப்பட்டுள்ள நகைகளை கேட்டு அஜித்தின் கண்ணிலும், வாயிலும் மிளகாய் பொடி தூவி கொடூர தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், கோவிலில் இருந்த சிசிடிவியை அழிக்க 29ம் தேதி காலையில் ராமச்சந்திரன் என்ற சப் இன்ஸ்பெக்டர் கோவிலில் இருந்த டிவிஆரை பறித்து சென்றதாகவும் வழக்கறிஞர் ஹென்றி திபென் தெரிவித்தார்.

Night
Day