திமுக பிரமுகர் ஓசியில் ஆட்டுகறி கேட்டு மிரட்டியதாக பாதிக்கப்பட்டவா் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே விளம்பர அரசின் அமைச்சர் பெயரை கூறி திமுக பிரமுகர் ஓசியில் ஆட்டுகறி கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.  திருவட்டார் சந்தை வளாகத்தில் வீராசாமி என்பவர் ஆட்டிறச்சி விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். அங்கு வந்த, திமுக திருவட்டார் தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் முத்துகுமார், ஆட்டு இறைச்சி கேட்டுள்ளார். அப்போது முத்துகுமார், தான் அமைச்சர் மனோதங்கராஜின் ஆள் எனவும் தன்னிடமே பணம் கேட்கிறாயா என கூறி ஆட்டிறச்சியை வீராசாமி மீது வீசியிருக்கிறார். மேலும் இரண்டு நாட்களில் உன் கடையை காலி செய்கிறேன் எனக் கூறி மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு பாதுகாப்பு கோரியும், மிரட்டல் விடுத்த திமுக பிரமுகா் முத்துகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Night
Day