சென்னை : இடைநிலை ஆசிரியர்கள் 14-வது நாளாக போராட்டம் - கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சம வேலைக்‍கு சம ஊதியம் வழங்கக்‍ கோரி, சென்னை நுங்கம்பாக்‍கத்தில் உள்ள டிபிஐ அலுவலக வளாகத்தில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்‍கத்தினர் 14வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதி 311-ஐ உடனடியாக நடைமுறைப்படுத்தவும், ஊதிய முரண்பாடுகளை களையவும்‍ ‍கோரி இடைநிலை ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக்‍கு வந்து 3 ஆண்டுகளாகியும், வாக்‍குறுதிகளை நிறைவேற்றாததைக்‍ கண்டித்து அவர்கள் முழக்‍கங்களை எழுப்பினர். கோரிக்‍கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். 

Night
Day