திரணாமுல் காங்கிரசுடன் கூட்டணி கதவு திறந்தே உள்ளது - காங்கிரஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டதால், மேற்குவங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார். இதுகுறித்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்தியா கூட்டணியில் தொடர்வோம் என்றும் மம்தா பானர்ஜி கூறியிருப்பதால், கூட்டணி அமையும் என நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

Night
Day